தென்காசி அருகே பாத்ரூமில் குளித்த பெண்ணை வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி கைது

5 months ago 19

செங்கோட்டை: தென்காசி மாவட்டம் புளியரை அருகே தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் (50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது பாஜ மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று புளியரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டு பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார்.

அதை பாஜ நிர்வாகி குமார், தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த அந்த பெண், அச்சத்தில் உதவி கேட்டு அலறி கூச்சலிட்டார். இதனால் அவர் தப்பி ஓடினார். இதையடுத்து அந்த பெண், புளியரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி புளியரை பகுதியில் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர்.

The post தென்காசி அருகே பாத்ரூமில் குளித்த பெண்ணை வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Read Entire Article