காசா: காசா மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் கடந்த 48 மணிநேரத்தில் 300 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் இருந்து இஸ்ரேல் குண்டு வீசியதிலும் துப்பாக்கியால் சுட்டதிலும் 73 பாலஸ்தீனர்களும், அமெரிக்கா ஆதரவுடன் சில அமைப்புகள் வழங்கும் உணவுப்பொருளை வாங்கச் சென்ற சிறுவர்கள் 33 பேரும் பலியாகியுள்ளனர். பள்ளியில் தங்கியிருந்த மக்கள் 16 பேரையும் நிவாரண முகாமில் இருந்த 13 பேரையும் இஸ்ரேல் கொன்றுள்ளது. காசா மருத்துவமனை இயக்குநரை குடும்பத்துடன் இஸ்ரேல் கொன்றுவிட்டதாக காசா அரசு செய்தித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 48 மணி நேரத்தில் 300 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.