சென்னை: தென்தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உள்ள சலனம் அரபிக்கடல் உள்ளே செல்லும் வரை மழை நீடிக்கும். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிழக்கு-மேற்கு மலை முகடுகளை ஈரப்பதம் முட்டும் போது அதிக மழை பெய்யும். தேனி – கன்னியாகுமரி வரை கிழக்கு சரிவு பகுதியில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: ஸ்ரீகாந்த் appeared first on Dinakaran.