தென் ஆப்பிரிக்கா வெற்றி... டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

3 weeks ago 7

மிர்புர்,

வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 4-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன.

வங்காளதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா (47.62 சதவீதம்) 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து (44.44 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 5வது இடத்திலும், இங்கிலாந்து (43.06 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (30.56 சதவீதம்), பாகிஸ்தான் (25.93 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

Changes on the World Test Championship standings following South Africa's triumph over Bangladesh in Mirpur #BANvSA | #WTC25https://t.co/vmEQtdOREI

— ICC (@ICC) October 24, 2024
Read Entire Article