தென் அமெரிக்காவை புரட்டியெடுத்த பனிப்புயல்.. இதுவரை 10பேர் உயிரிழப்பு: டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!!

4 hours ago 1

புளோரிடா: தென் அமெரிக்காவில் வீசிய பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில், புளோரிடா, ஜார்ஜியா, லூசியானா உள்ளிட்ட மாகாண ஆளுநர்கள் அவசர நிலையை அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் வடக்கு வளைகுடா கடற்கரையில் அதிகமான பனிப்பொழிவை ஏற்படுத்திய பனிப்புயல் கிழக்கு நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கிழக்கு கரோலினா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

ஒன்றரை அடி உயரம் பனி குவிந்துள்ளதால் தெற்கு டெக்சாஸ் முதல் புளோரிடாவின் ஜாக்சன்வில்லே வரையிலான தென் அமெரிக்காவின் சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. பனிபொழிவால் கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பனிப்பொழிவு அதிகமாக உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. குளிரில் இருந்து மக்கள் தப்பிக்க அரசு சார்பில் குளிர்காயும் மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பனிப்பொழிவு காரணமாக 10 பேர் பலியாகியுள்ளனர்.

பனிப்பொழிவு நீடிப்பதால் சார்ஜியா, லூசியானா, மசிசிப்பி, அலபாமா, புளோரிடா மாகாண ஆளுநர்கள் அவசரகால நிலையை அறிவித்துள்ளனர். பனிப்பொழிவு கடுமையாக வீசியதால் டெக்சாஸ், லூசியானா உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 2200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் பனிப்பொழிவு 10 அங்குல உயரம் குவிந்து புதிய சாதனையை படைத்தது. இது கடந்த 1963ம் ஆண்டின் பனிப்பொழிவு சாதனையை முறியடித்ததாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தென் அமெரிக்காவை புரட்டியெடுத்த பனிப்புயல்.. இதுவரை 10பேர் உயிரிழப்பு: டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article