தூய்மைப்பணிகளில் மெத்தனம் எடப்பாடி குற்றச்சாட்டு

3 months ago 18

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் உள்ள நகரங்களின் தூய்மைப் பட்டியலில், 2020ல் 45வது இடத்திலும், 2021ல் 43வது இடத்திலும் சென்னை மாநகராட்சி இருந்தது. இன்று சென்னை மாநகராட்சி அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, இந்த ஆண்டு 199வது இடத்தைப் பிடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பருவ மழைக் காலங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகஅளவில் வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில், 2020ம் ஆண்டில் அந்த இடங்கள் பெருமளவு குறைக்கப்பட்டன. அப்போது, சென்னை மாநகராட்சி முழுவதும் தூர்வாரும் பணிகள், தூய்மைப் பணிகள் நடைபெற்றன. எங்களது ஆட்சியில் இப்பணிகள் முழுமையாக நடைபெற்றதுபோல், இப்போது இப்பணிகள் முழுமையாக நடைபெறாத காரணத்தால், தூய்மை நகரமாக 43வது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது 199வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

The post தூய்மைப்பணிகளில் மெத்தனம் எடப்பாடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article