தூத்துக்குடியில் ரயில்வே பராமரிப்பு பணியில் கழிவுப்பொருட்கள் எரிப்பால் கடும் புகைமூட்டம்- பரபரப்பு

1 month ago 9

தூத்துக்குடி, அக்.11: தூத்துக்குடியில் ரயில்வே பராமரிப்பு பணியில் பயன்படுத்திய கழிவுகளை எரிக்க வைத்த தீயால் அதிகளவில் புகைமூட்டம் கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் அகற்றப்பட்ட பழைய கட்டைகள், கேபிள் வயர் கழிவுகள் உள்ளிட்டவை அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை இந்த கழிவுகளுக்கு தொழிலாளர்கள் சிலர் தீ வைத்து எரித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகளவில் தீப்பற்றி எரிந்து அப்பகுதி முழுவது கரும்புகை எழும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இதனிடையே கரும் புகைமண்டலத்தால் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தூத்துக்குடியில் ரயில்வே பராமரிப்பு பணியில் கழிவுப்பொருட்கள் எரிப்பால் கடும் புகைமூட்டம்- பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article