தூத்துக்குடியில் மழை, வெள்ளம் எதிரொலி.. 225 வீடுகள் சேதம்; விரைவில் இழப்பீடு வழங்கப்படும்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!!

1 month ago 6

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் 225 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் பெரும்பாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் 225 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது; விரைவில் இழப்பீடு வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 80 குளங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களைக் கொண்டு அகற்றி வருகிறோம். 8 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது. ஏரல் தரைப்பாலத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் போக்குவரத்து தொடங்கும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

The post தூத்துக்குடியில் மழை, வெள்ளம் எதிரொலி.. 225 வீடுகள் சேதம்; விரைவில் இழப்பீடு வழங்கப்படும்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!! appeared first on Dinakaran.

Read Entire Article