
தூத்துக்குடி, திரேஸ்புரம், அண்ணா காலனியைச் சேர்ந்த தர்மபுத்திரன் மகன் ரொமிஸ்டன் (வயது 30). இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் விடும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று இரவு மீன்பிடி துறைமுகம் செல்வதற்காக பீச் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவர் சப் கலெக்டர் அலுவலகம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற கார் மீது அவரது பைக் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.