தூத்துக்குடியில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்.பி. ஒப்படைத்தார்

1 day ago 1

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சைபர் குற்ற பிரிவு ஏ.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு கண்டுபிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 100 செல்போன்களை இன்று (01.04.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி. சகாய ஜோஸ் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் இதுவரை ரூ.1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 1065 காணாமல்போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார். அதனை தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் எடுத்துரைத்து சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் செல்போன் தொலைந்து விட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்த விவரங்களுடன் CEIR.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Read Entire Article