தூத்துக்குடியில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது

1 month ago 4

தூத்துக்குடி, டிச. 10: தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது. தூத்துக்குடி தாளமுத்துநகர், ராம்தாஸ் நகர், வீட்டுவசதி வாரிய காலனியை சேர்ந்த இசக்கி மகன் வேல்முருகன் (21). ஆட்டோ டிரைவரான இவர், தாளமுத்துநகர் மின்வாரிய அலுவலகத்தின் வடபுறத்தில் உள்ள மைதானத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்தார். இவரது ஆட்டோ திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவவே, ஆட்டோ தீயில் கருகி நாசமடைந்தது. இதன் மதிப்பு ₹50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article