
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வந்த விளம்பரம் மற்றும் இணையதளத்தில் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதாக வந்த விளம்பரம் ஆகியவற்றை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டு மோசடி அடைந்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட 3 பேரும் இதுகுறித்து NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளனர்.
மேற்சொன்ன புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் முதலீடு மோசடி வழக்குகளில் ரூ.38,993, ரூ.2,98,510 மற்றும் இருசக்கர வாகன விற்பனை மோசடி வழக்கில் ரூ.34,000 என மொத்தம் ரூ.3,71,503 பணம் திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது. இதனையடுத்து மேற்சொன்ன மீட்கப்பட்ட ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 503 பணத்தை நேற்று (30.04.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.