பூட்டிய வீட்டுக்குள் முதிய தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

5 hours ago 4

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், காட்டுப்பரமக்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் (75 வயது). கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தனலட்சுமி (70 வயது). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தங்கள் குடும்பத்தினருடன் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

பரமக்குடியில் உள்ள வீட்டில் நாகசுப்பிரமணியனும், அவருடைய மனைவியும் மட்டும்தான் இருந்தனர். கடந்த 27-ந் தேதி இவர்களுடைய மகளான புவனேசுவரி, பெற்றோரிடம் போனில் பேசியுள்ளார். அதன்பின்பு கடந்த 3 நாட்களாக பெற்றோரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த புவனேசுவரி இன்று மதியம் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

கதவை தட்டியும் திறக்காததால் புவனேசுவரி கதறி அழுதார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நாகசுப்பிரமணியனும், தனலட்சுமியும் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன், மனைவி இருவரும் எப்படி இறந்தனர்? தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article