தூத்துக்குடி, டிச. 4: தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் இங்குள்ள அலுவலகங்களில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடந்த நேரத்தில் அலுவலக பொறுப்பில் இருந்த தூத்துக்குடி கீழூர் சார் பதிவாளர் அரோக்கியராஜ் (54), அலுவலக உதவியாளர் முத்துமணி (59), தனியார் பத்திர எழுத்தர் மாரியப்பன் (48), பத்திர எழுத்தர் அலுவலக ஊழியர் ஜோசப் செல்வராஜ்(45) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.ரூ.39.95 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டது.
The post தூத்துக்குடி சார் பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.