தூத்துக்குடி, ஆத்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 3.09 டன் பீடி இலை மூடைகள் சிக்கியது: பைபர் படகு, வேன் பறிமுதல்; ஒருவர் கைது

2 weeks ago 3


தூத்துக்குடி: தூத்துக்குடி, ஆத்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 3.09 டன் பீடி இலை மூடைகள் சிக்கியது. கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடியில் பீடி இலை மூடைகள் கடத்தல் சம்பவத்தில் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு மூளையாக இருந்தவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி இனிகோ நகர் ஏலக்கூடம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை மூடைகள் கடத்த இருப்பதாக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ‘கியூ’ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், எஸ்எஸ்ஐ ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், பழனிபாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் ஏலக்கூடம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ‘டெம்போ டிராவலர்’ வேன் இனிகோ நகர் கடற்கரைக்கு வந்து நின்றது. அதிலிருந்து குதித்த ஒருவர் வேனில் வைக்கப்பட்டிருந்த பீடி இலை மூடைகளை கடலில் நிறுத்தப்பட்டிருந்த ‘பைபர்’ படகில் ஏற்ற முயன்றார்.

இதையடுத்து அவரை ‘கியூ’ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் வேனை சோதனையிட்டதில் அதில் தலா 30 கிலோ எடை கொண்ட ‘கட்டிங்’ பீடி இலை மூடைகள் 29 எண்ணமும், பீடி இலை மூடைகள் 14 எண்ணமும் என மொத்தம் 43 பீடி இலை மூடைகள் சிக்கின. இதன் மொத்த எடை 1.29 டன் ஆகும். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்த போரன்ஸ் மகன் ராபின்ஸ்டன் (25) என்பது தெரியவந்தது. மேலும் பட்டுராஜ் என்பவர் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா, வெள்ளி கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தப்பட இருந்த பீடி இலைகள் இலங்கையில் கிலோ ரூ.2,500க்கு விற்கப்படுகிறது. இதன் இலங்கை மதிப்பு ரூ.32 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். கடத்த பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் பைபர் படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவைகளையும், கைது செய்யப்பட்ட 2 பேரையும், சுங்கத்துறையினரிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போலீஸ் சப்-டிவிசனுக்குட்பட்ட ஆத்தூர் போலீஸ் சரகம் ஜெயராமச்சந்திரபுரம் கிராமத்தின் கிழக்கே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இன்று காலை 1 மணிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக இறக்கி வைக்கப்பட்டிருந்த தலா 30 கிலோ எடை ெகாண்ட 60 மூடை பீடி இலை மூடைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசைக் கண்டதும் வேனில் வந்தவர்களும், படகில் வந்தவர்களும் தப்பியோடி விட்டனர். கடத்தப்பட இருந்த 1.8 டன் பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும். தூத்துக்குடி, ஆத்தூரில் சிக்கிய ெமாத்தம் உள்ள 3.09 டன் பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.77 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் போதை பொருள், பீடி இலைகள் ஆகியவை அடிக்கடி கடத்தப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கடற்பகுதியில் கடலோர காவல்படை மற்றும் மரைன் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தூத்துக்குடி, ஆத்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 3.09 டன் பீடி இலை மூடைகள் சிக்கியது: பைபர் படகு, வேன் பறிமுதல்; ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article