
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு 1050 மேகா வாட் விகிதம் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அனல் மின்நிலையத்தின் குளிரூட்டும் அறை ஒன்றில் நேற்று இரவு தீ ஏற்பட்டது. இந்த தீயாணது மளமளவென பரவத்தொடங்கியது. இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதனைக்கண்ட அனல் மின்நிலைய ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.