
மும்பை,
பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' படத்தை இயக்கி உள்ளார். கோபிசந்த் பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜாத் படத்தின் டிரெய்லர் அப்டேட்டை சன்னி தியோல் பகிர்ந்துள்ளார். அதன்படி, ஜாத் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.