தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

3 months ago 30
பல்லாவரம் - தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புக்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், மாநகராட்சி பணியாளர்களின் துணையுடன் அதிரடியாக அகற்றினார் பல்லாவரம் - தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்ற சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு கால அவகாசம் வழங்கியும், அதனை அகற்றாத நிலையில் போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியன் தலைமையில், மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் இறங்கினர். விளம்பரப் பலகைகள் வாகனங்கள் பழுது நீக்கும் உபகரணங்கள் கடைகளில் டயர் கழிவு பொருட்கள் ,சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி வண்டியில் போடச் செய்தார். ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்த நபர்களிடம், நீங்கள் மட்டும் வாழ்ந்தா போதுமா? மக்கள் நடக்க வேண்டாமா ? அவசரத்துக்கு எப்படி செல்ல முடியும் ? என கடுமையான எச்சரித்தார் நடைபாதையையும்  சாலையையும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த 2 மற்றும் 4 சக்கர வாகங்களுக்கு அபராதம் விதித்தார். ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி வாகனத்தில் ஏற்றப்படுவதைத்  தடுத்ததால் கடை உரிமையாளர்களுக்கும்,  காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. ஒருவர் அண்ணன் பேசுகிறார் என்று செல்போனை கொடுக்க அதனை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் அந்தகடையின் கூறையை கழட்டி ஆக்கிரமிப்பை அகற்ற செய்தார். நடைபாதை ஆக்கிரமித்து இருப்பதால் மக்கள் சாலையில் இறங்கி நடப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதே போல போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்லாவரம் விமான நிலையம் , ஜிஎஸ்டி சாலையிலும் ஆக்கிரமிப்புகள்  அகற்ற பட வேண்டும் என்பதே  வாகன ஓட்டிகள் கோரிக்கையாக உள்ளது.
Read Entire Article