
சென்னை,
நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ அம் கேம்' படத்தில் இணைந்துள்ளார்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தற்போது மலையாளத்தில் 'ஐ அம் கேம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். இப்படத்தில் தமிழ் நட்சத்திரங்கள் குவிந்து வருகின்றனர். அதன்படி, தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சண்டை இயக்குனராக அன்பறிவு, மேலும் நடிகர்களான கதிர், ஆண்டனி வர்கீஸ் பிபி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் 'கட்சி சேர' புகழ் சம்யுக்தா விஸ்வநாதன் இணைந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.