திருச்சி, ஜன.11: திருச்சி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர். திருச்சி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் போில் உறையூர் இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் ஓசிஐயு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமலிங்க நகர் பார்க் அருகே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் மெத்த பெட்டமைன் போதைப்பொருள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. போதைப்பொருளை பறிமுதல் செய்து சீனிவாசாநகர் கனரா பேங்க் காலனியைச் சேர்ந்த பூஜித் (24), ஈரோடு டீச்சர் காலனியைச் சேர்ந்த ஆல்வின்(23), ராஜா காலனியைச் சேர்ந்த நகுல் தேவ்(21) ஆகிய 3 பேரிடம் நடத்தி வருகின்றனர். மேலும் இதேபோல் போதைப்பொருள் விற்பனையில் திருச்சி மாநகரில் பலர் சம்மந்தப்பட்டு உள்ளதாகவும், இவர்களுக்கு தலைவனாக சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் செயல்படுவதாகவும், போதைப் பொருட்கள் பெங்களூரில் இருந்து வாங்கி வரப்பட்டு திருச்சி மாநகர் முழுவதும் விற்கப்பட்டு வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
The post துற்றைய கல்லூரி மாணவர், இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.