துறையூர், ஜன.11: துறையூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உத்திராபதி, செயலாளர் சசிகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். நீதிமன்ற வளாகத்திலுள்ள விநாயகர் கோவில் முன்பு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோகிலா, ரம்யா,கிருத்திகா, மஞ்சு, பாகீரதி உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்கள் பொங்கலிட்டனர். வழக்கறிஞர்கள் செந்தில்குமார், பாஸ்கரன், செல்வராஜ், மனோகரன், செல்லதுரை, முகமது ரபீக், நிர்மல்குமார், சுரேஷ்குமார், முத்துகுமார், அறிவழகன், தண்டபாணி, நரேஷ், கண்ணன், அன்பு பிரபாகரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், துறையூர் நீதிமன்ற நீதிபதிகள், பணியாளர்கள் மற்றும் கிறிஸ்துவ, முஸ்லீம் மதத்தினர் பங்கேற்றனர். நிறைவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் சாம்பார் சாதம், தயிர்சாதம் வழங்கப்பட்டது.
The post துறையூர் நீதிமன்றத்தில் பொங்கல் விழா appeared first on Dinakaran.