துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ - வெளியான முக்கிய தகவல்

14 hours ago 1

சென்னை,

மதிமுக கட்சியின் முதன்மை செயலாளராக இருக்கும் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும், கட்சியில் உள்ள மூத்த தலைவர் ஒருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில், மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கட்சித் தலைவர்கள் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வைகோ மகன் துரை வைகோவிற்கு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அன்புக் கட்டளையிட்டுள்ளார்.சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைத்து துரை வைகோவை வைகோ சமாதானம் செய்து வருவதாகவும், பதவி விலகல் முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Read Entire Article