துருக்கி: விண்வெளி ஆய்வு மையத்தில் பயங்கரவாத தாக்குதல் - 4 பேர் பலி

3 months ago 14

அங்காரா,

துருக்கி தலைநகர் அங்காராவில் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகம் உள்ளது. இந்த ஆய்வு மையத்தில் விஞ்ஞானிகள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையத்திற்குள் நேற்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article