துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம்

6 months ago 45

மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் கோவிந்தா. இவர் இந்தியில் 165 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம் அடைந்துள்ளார்.

இது குறித்த விசாரணையில், தான் வைத்திருக்கும் உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விழுந்து கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், காலில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article