துபாய்: துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று, ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டோபர் ஓகான்னெல், நெதர்லாந்து வீரர் போடிக் வான்டி ஸாண்ட்ஸுல்ப், இத்தாலி வீரர் நார்டி வெற்றி பெற்றனர். துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நேற்று நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் இத்தாலி வீரர் ஆண்ட்ரியா வாவஸோரி, நெதர்லாந்து வீரர் போடிக் வாண்டி மோதினர். இதில் அற்புதமாக ஆடிய வாண்டி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் லாயிட் ஜார்ஜ் முய்ர்ஹெட் ஹாரிஸ், இத்தாலி வீரர் நார்டி மோதினர். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய நார்டி, 2வது செட்டை போராடி கைப்பற்றினார். இதனால், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவர் வென்றார். மற்றொரு போட்டியில் எமிரேட்ஸ் வீரர் அப்துல் ரஹ்மான் அல் ஜனாஹி, ஆஸி வீரர் கிறிஸ்டோபர் ஓகான்னெல் மோதினர். இதில் அநாயாசமாக ஆடிய ஓகான்னெல் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார்.
The post துபாய் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் ஆஸி வீரர் அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.