தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக சாய்ந்திருந்த மின்கம்பம் அருகே விளையாடச் சென்ற 2 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 5 வயதான குழந்தை ஜமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 9 வயதான பிரதிதா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
The post ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி; மற்றொரு குழந்தை படுகாயம்! appeared first on Dinakaran.