துனிஸ்,
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அதிபர் கைஸ் சையத் (வயது 69) தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் கைஸ் சையத் 90.69 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அயாச்சி ஜாம்மேல் வெறும் 7.35 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன்மூலம் சையத் 2-வது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். அதேசமயம் இந்த தேர்தலில் அங்கு மொத்தம் 28.8 சதவீதம் வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது.