சென்னை: துணைவேந்தர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள், இந்த நிலை மாறும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியார் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்ததற்காக சீனி விஸ்வநாதனுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளதை தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், ‘‘அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகங்களில் பாரதியாருக்கான இருக்கை அமைக்காமல் இருக்கிறார்கள்.பாரதியாரின் பெயரிலேயே பல்கலைக்கழகங்கள் இருந்தும் அவருக்கான இருக்கை இல்லை. துணைவேந்தர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த நிலை மாறும்’’ என்றார்.
The post துணைவேந்தர்களுக்கு அழுத்தம்: ஆளுநர் சொல்கிறார் appeared first on Dinakaran.