சென்னை: துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில்; யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலையும் இணைத்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
The post துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.