துணைவேந்தர் நியமன அதிகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

5 hours ago 3

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தருக்கான அதிகாரத்தை கவர்னருக்கு பதிலாக தமிழக அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களை அரசே நியமிப்பது உள்ளிட்டவற்றை கொண்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

கவர்னர் ஒப்புதல் வழங்காததை கண்டித்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வந்தது.

இதையடுத்து, துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள், பதவி கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு, புதிய துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழுவை தமிழக அரசு நியமித்து வருகிறது.

இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்து பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட்டு, துணைவேந்தர்கள் நியமன அதிகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் (தமிழக அரசு) பதில் அளிக்க உத்தரவிட்டது.

Read Entire Article