துணை முதல்வர் பிறந்தநாள் விழா

1 month ago 6

கூடுவாஞ்சேரி: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில், உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் விழா கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள 19வது வார்டுக்குட்பட்ட ராஜிவ்காந்தி நகரில் நடந்தது. இதில், நகர மன்ற துணை தலைவர் ஜி.கே.லோகநாதன் தலைமை தாங்கினார்.

19வது வார்டு செயலாளர் முரளி, அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், நிர்வாகிகள் தேவி, விநாயகம், குபேரன், சீனா, எட்டியப்பன், குமுதா, துரைபாபு, ரசாக், யுவராஜ், ஆனந்த் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

The post துணை முதல்வர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Read Entire Article