துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது மேலும் ஒரு வழக்கு

2 months ago 13

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.பிரவீண் சமாதானம் தாக்கல் செய்துள்ள மனுவில், “துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் கொடி, சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது. கட்சி பாகுபாடின்றி நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய துணை முதல்வர் கட்சி சின்னத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினால் அது திமுக வின் சார்பில் வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்பற்றாதது சட்டவிரோதமானது. எனவே, அரசுநிகழ்வுகளில் பங்கேற்கும்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய தடை விதிக்க வேண்டும். மேலும், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக் கான ஆடை கட்டுப்பாடு தொடர் பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியுள்ளார்.

Read Entire Article