சங்கரன்கோவில், நவ.27: சங்கரன்கோவில் நகரத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நகர திமுக செயலாளர் பிரகாஷ் ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சங்கர்நகரில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படுகிறது. காலை 11 மணி அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு பால், பிரட் மற்றும் பழங்கள் வழங்குதல், காலை 11.30 மணிக்கு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல், மதியம் 12 மணிக்கு ராஜபாளையம் சாலையில் உள்ள டிடிடிஏ சிறப்பு குழந்தைகள் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய அசைவ உணவு வழங்குதல், மேலும் வார்டு பகுதிகளில் கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் சங்கரன்கோவில் நகர திமுக சார்பில் இன்று நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.