துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய மக்களின் அரணாக நிற்பார்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து

2 months ago 18

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அறிக்கை: கல்லூரி படிப்பை முடித்த காலம் துவங்கி, திமுக இளைஞரணியை முன்னின்று வழிநடத்தி, அமைச்சராக பொறுப்பேற்று, இளைஞர் அணி மற்றும் விளையாட்டு துறையில் முன்மாதிரி அமைச்சராய் வலம் வந்து, இன்று துணை முதலமைச்சர் என்ற உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி. இளம்வயதில் தொட முடியாத உயரத்தை தொட்டு, இன்னும் திமுகவுக்கும் ஆட்சிக்கும் வலு சேர்க்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தளபதியாக முன்வரிசையில் நிற்கிறார்.

தனது தந்தையோடு கரம் கோர்த்து, தமிழ்நாட்டை வளமான பாதையில் வழிநடத்துவதற்கு வருங்கால வைப்புநிதியாக நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயநிதியாய் வலம் வந்து, இன்று துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களின் சார்பில், இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாத்தா கலைஞர் வழியில், தந்தை தளபதி ஸ்டாலின் வழியில், பேரன் உதயநிதியும் இஸ்லாமிய மக்களின் அரணாக நிற்பார் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு நிறையவே உள்ளது. தொடரட்டும் உங்கள் துணை முதலமைச்சர் பணி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 

The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய மக்களின் அரணாக நிற்பார்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article