துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்

3 months ago 30

சென்னை,

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துணை-முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக துணை முதல்-அமைச்சராக புதிய பொறுப்பை ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன், சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read Entire Article