துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் - தனுஷ் வாழ்த்து

2 months ago 22

சென்னை,

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் துணை முதல்-அமைச்சர் பதவியேற்க உள்ளார்.

துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்டதையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

இந்தநிலையில், அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான தனுஷ், உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'தமிழகத்தின் துணை முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

Hearty congratulations to @Udhaystalin brother on becoming the Deputy CM of Tamil Nadu.

— Dhanush (@dhanushkraja) September 29, 2024
Read Entire Article