சென்னை : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் , அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு – சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.