துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

3 months ago 20

திருவள்ளூர்: துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நேற்றுமுன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகர செயலாளர், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, கலைஞர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பயணிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்: திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதற்கும், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு. நாசருக்கு சிறுபான்மை துறை அமைச்சராக பதவி வழங்கியதற்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் விதமாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் முத்து தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ மாலை அணிவித்து, மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்புக்ள வழங்கிக் கொண்டாடினர். இதில், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே. சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், பொருளாளர் கரிகாலன், முன்னாள் பேரூர் செயலாளர்கள் கண்ணதாசன், வெங்கடேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழழகன், நிர்வாகிகள் நீலகண்டன்,

சூர்யா, கோபிநாத், கவுன்சிலர் சுபாஷினி, சாய் சத்யா, சுல்தான், உதயகுமார், ஜெயக்குமார், விமல் ராஜ், தமிழ்ச்செல்வன், வசந்தகுமார், குருவப்பா, கலையரசி, ரவி, சலேக், ஜெகநாதன், பன்னீர்செல்வன், சரளம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், சுண்ணாம்புகளும் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதில், கவரப்பேட்டை பஜாரில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமையில் கடைகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அப்போது, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் திருமலை, பிரபு, சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஹரிபாபு, அக்கீம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் அறிவழகன் தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், ஒன்றியச் செயலாளர் மணிபாலன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் மற்றும் கவுன்சிலர்கள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.

The post துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article