
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு (வயது 73), நள்ளிரவு 2 மணியளவில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகதீப் தன்கரின் உடல் நலம் குறித்து அறிய இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார். மருத்துவமனையில் ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று துணை ஜனதிபதி ஜெகதீப் தன்கர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.