
காந்தி நகர்,
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் கனமழை தீவிரமடைந்து வருகிறது.
கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் துணிக்கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் துணிக்கடைகளுக்குள் இருந்த சேலைகள் உள்ளிட்ட ஆடைகள் சேதமடைந்தன. சேதமடைந்த ஆடைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.