தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு

3 months ago 14

சென்னை,

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏலத்தை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் தொழில் முனைவோர் நாளை மாலை 2 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ பிரிவில் 8 கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 2,25 லட்சமும், பி பிரிவில் 17கடைகள் அமைக்க தலா ரூ. 4 லட்சமும், சி பிரிவில் 15 கடைகள் அமைக்க தலா ரூ. 5.60 லட்சமும், டி பிரிவில் 10 கடைகள் அமைக்க தலா ரூ. 3 லட்சமும் குறைந்தபட்ச வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article