தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு

7 hours ago 2

பனாஜி: “தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது என்ற செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது” என குடியரசு துணைத்தலைவர் தன்கர் தெரிவித்துள்ளார். கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘இந்த தாக்குதல்கள் சர்வதேச எல்லைக்கு அப்பால் மிக துல்லியமான இருந்தது. நமது நெறிமுறைகளை மனதில் கொண்டு, நமக்கான இலக்கு தீவிரவாதிகள் மட்டுமே என இந்திய ஆயுதப்படைகள் நடத்திய தாக்குதல் ஒரு மகிழ்ச்சியான செய்தி” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தன்கர், “இந்தியா ஒரு உலகளாவிய பொருளாதார சக்தியாகவும், கடல்சார் சக்தியாகவும் வளர்ந்து வருகிறது. நாடு அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உறுதிப்பூண்டுள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் வலிமை மற்றும் தேசத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வில் இருந்து அமைதி வருகிறது” என குறிப்பிட்டார்.

The post தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article