தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடரும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

3 weeks ago 4

புதுடெல்லி: தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, போலீசாரின் தியாகம் வீண் போகாது. 2047ம் ஆண்டுக்குள் நாடு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாறும். கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் , வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டது.

எனினும் நமது போராட்டம் இன்னும் ஓயவில்லை. போதைப்பொருள், சைபர் கிரைம், மத பதற்றத்தை உருவாக்கும் சதி, ஊடுருவல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பிற்காக 36.438 காவலர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 216 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர் ” என்றார்.

The post தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடரும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article