தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா, அமெரிக்கா வலுவான கூட்டாளி: பிரதமர் மோடி உரை

1 week ago 5

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து வாழ்த்தினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அதிபர் டிரம்பை போலவே, இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர்; MAKE INDIA GREAT AGAIN என இந்தியாவும் வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர்கிறது. ராணுவ தளவாட கொள்முதலில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய சக்தி. தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். விண்வெளி துறையிலும் அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை. குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா, அமெரிக்கா வலுவான கூட்டாளி. மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியை இந்தியாவுக்கு கடத்த நடவடிக்கைக்கு ஒப்புதல். அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட நடவடிக்கை.

The post தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா, அமெரிக்கா வலுவான கூட்டாளி: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Read Entire Article