தீவிரவாதத்திற்கு உலகில் இடமில்லை இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி ஆதரவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்

5 months ago 28

புதுடெல்லி:பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படையினர் தற்போது லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி அனைத்தையும் கேட்டறிந்தார். அப்போது இஸ்ரேல் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக பிரதமர் மோடி கூறுகையில்,’ நமது உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. அதே சமயம் பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும், பணயக்கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியமானது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

The post தீவிரவாதத்திற்கு உலகில் இடமில்லை இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி ஆதரவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் appeared first on Dinakaran.

Read Entire Article