தீவிரவாத தாக்குதலுக்கு முதல் நாள்; பதுங்கு குழிக்குள் இருந்த யாஹ்யா சின்வார்: புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்

4 weeks ago 17

ஜெருசலேம்: கடந்தாண்டு அரங்கேற்றிய தீவிரவாத தாக்குதலுக்கு முதல் நாள் பதுங்கு குழிக்குள் இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் புதிய வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் படைகளால் காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் புதிய வீடியோ ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதிக்கு (1,200 பேர் கொல்லப்பட்ட நாள்) முதல் நாள் எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் யாஹ்யா சின்வார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுரங்கப்பாதையில் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது.

மேலும் அந்த வீடியோவில், சுரங்கப் பாதையின் பதுங்கு குழி வழியாக மற்றொரு பாதையில் செல்வதை காண முடிகிறது. தனது கையில் பைகளையும் வைத்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தின் ஐடிஎஃப் செய்தித் தொடர்பாளர் நடவ் ஷோஷானி கூறுகையில், ‘2023 அக்டோபர் 7ம் தேதி தீவிரவாத தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, யாஹ்யா சின்வார் தனது மனைவி, மக்களுடன் சுரங்கப்பாதையில் ஒளிந்துகொண்டிருந்தார். மேலும் தனது தீவிரவாதிகள் நடத்திய கொலைகள், கடத்தல்கள் மற்றும் பலாத்காரங்களை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்.

The post தீவிரவாத தாக்குதலுக்கு முதல் நாள்; பதுங்கு குழிக்குள் இருந்த யாஹ்யா சின்வார்: புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் appeared first on Dinakaran.

Read Entire Article