தீவிரமடையும் போர்; உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

1 month ago 5

கீவ்: உக்ரைன் – ரஷ்யா போர் ஆயிரம் நாள்களை கடந்து நீடித்து வருகிறது. ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இந்நிலையில் ரஷ்யா மீது அமெரிக்காவின் ஏவுகணைகளை வீசி உக்ரைன் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் விதமாக அணு ஆயுத பயன்பாடு தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்து கையெழுத்திட்டுள்ளார்.

இதனால் உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் உக்ரைன் மக்கள் பீதியில் உள்ளனர். போர் பதற்றம் அதிகரித்துள்ள இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக தகவல் கிடைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தூதரக ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உக்ரைன் வாழ் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post தீவிரமடையும் போர்; உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article