தீவிர வலிக்கு சிகிச்சை வழங்க காவேரி ஜீரோ பெய்ன் சென்டர்: காவேரி மருத்துவமனையின் புதிய தொடக்கம்

3 weeks ago 5

சென்னை: காவேரி ஜீரோ பெய்ன் சென்டர் என்பது நோயாளியின் நலனை மையமாக கொண்டு மருத்துவ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, விரிவான சிகிச்சையை வழங்குகிறது. குறிப்பாக முதுகுத்தண்டு வலி, புற்றுநோயுடன் தொடர்புடைய வலி, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி மற்றும் நரம்பு நோய் சார்ந்த வலி போன்ற பாதிப்பு நிலைகளுக்கு நிவாரணம் வழங்கும் ரேடியோ பிரீக்வென்சி அப்லேஷன் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த ரேடியோ பிரீக்வென்சி அப்லேஷன் சிகிச்சையில் துல்லியத்தோடு வலியுள்ள நரம்புகளை குறி வைத்து சிகிச்சையளிக்கிறது. இந்த மையம் தொடர்பாக காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: தீவிர வலி என்பது, ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரும் சுமையாகும். உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிகிச்சை அளிக்கப்படாத அல்லது சரியாக நிர்வகிக்கப்படாத வலியுடன் பல நோயாளிகள் சிரமத்தோடு வாழ்கின்றனர். வாழ்க்கை தரம் குறைப்பதற்கு இது வழி வகுக்கிறது. காவேரி ஜீரோ பெய்ன் சென்டர் மூலம் இந்நிலையை மாற்றுவது நோக்கமாகும். வலியின் மூல காரணங்களை இலக்காக கொண்டு நவீன சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் வெறும் நிவாரணம் மட்டுமின்றி, நம்பிக்கையின் புதுப்பிக்கப்பட்ட உணர்வையும் இம்மையம் வழங்கும்.

ரேடியோ பிரீக்வென்சி அப்லேஷன் போன்ற மேம்பட்ட உத்திகளுடன் சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கும் முழுமையான தீர்வுகளை வழங்குவோம். வாழ்க்கையை முழுமையாக, வலியில்லாமல் வாழ நோயாளிகளுக்கு உதவுவதே இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

The post தீவிர வலிக்கு சிகிச்சை வழங்க காவேரி ஜீரோ பெய்ன் சென்டர்: காவேரி மருத்துவமனையின் புதிய தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article