சென்னை: தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 270-ஆவது பிறந்த நாளான இன்று (17.4.2025 – வியாழக் கிழமை), சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, தீரன் சின்னமலை திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மரியாதை செலுத்தினார்கள்.