தீபாவளியை முன்னிட்டு இன்று மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு : மெட்ரோ நிர்வாகம் தகவல்

2 weeks ago 5

ChennaiMetro, Deepavaliசென்னை : தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக இன்று மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்கு புறப்படும் மற்றும் கடைசி ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்கு புறப்படும்).
* காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

* காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை:
பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

* 31 மற்றும் 1ம் தேதிகளில் மெட்ரோ ரயில் இயக்கங்களின் விவரங்கள் :
காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தீபாவளியை முன்னிட்டு இன்று மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு : மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article